சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா தோல்வி

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      விளையாட்டு
hockey india lose 2018 3 3

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் இந்தியா தோல்வியடைந்தது.

சமநிலை

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை மோதின. அர்ஜென்டினா வீரர் கோன்சாலோ பெய்லாட் 13 மற்றும் 23-வது நிமிடங்களில் கோல் அடித்தார். அதற்குப் பதிலாக இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் 24 மற்றும் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றது.


3-2 என்ற கணக்கில்...

இந்தியா சமநிலை செய்த அடுத்த நிமிடத்தில், ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் கோன்சாலோ மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலைப் பெற்றது. கனமழைக் காரணமாக நான்காவது கால்பகுதி ஆட்டம் தடைபெற்றது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்களில் கோல் அடித்து சமநிலைப்படுத்த முடியவில்லை. இதனால் அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா அடுத்த போட்டியில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 6-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 9-ந்தேதி அயர்லாந்தையும் எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து