சேவாலயாவில் முதியோர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி,பீமாதசாந்தி,சதாபிஷேகம் விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      திருவள்ளூர்
Thiruvallur

திருவள்ளுர் மாவட்டம் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

 சேவாலயாவில் மாணவர்கள் பயிலும் இலவச பள்ளியும்,முதியோர் இல்லமும்,குழந்தைகள் இல்லமும்,கோ சாலையும் செயல்பட்டு வருகிறது.8 முதியோர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி,பீமாதசாந்தி, சதாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.சேவாலயா ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதுபோல,ஆதரவற்ற முதியோர்களையும் பராமரித்து வருகிறது. முதியோர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி,பீமாதசாந்தி,சதாபிஷேகம் வீடுகளில் நடைபெறுவதுபோல சேவாலயாவிலும் 60,70,80 வயதுக்கேற்றார்போல் விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

சதாபிஷேகம்

இதுபோன்ற விழாக்கள் கொண்டாடும் நேரத்தில் முதியோர்கள் ஆனந்த கண்ணீர் விட்டு உள்ளம் மகிழக சேவாலயா குடும்பத்தினருக்கு தங்களின் ஆசீர்வாத்தை வழங்கினர்.சேவாலயா கோ சாலையில் பால் வற்றிய பசுக்களுக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.கோபூஜை மேடையில் குழல் ஊதும் கண்ணனாக இராஜகோபாலன் சிலை வைக்கப்பட்டுள்ளது.சேவாலயா ஒருங்கிணைப்பாளர் வெங்கடரமணி சதாபிஷேகத்தை முன்னிட்டு கோதானமும் வழங்கினார்.விழாவை சிறப்பிக்க தாட்சாயணி ராமசந்திரனின் மாணவிகள் நடனமாடினார்கள்.

விழாவில் கிராம பொதுமக்கள், பெரியோர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் விழாவை கண்டுகளித்து ஆசிகள் பெற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சேவாலயா நிறுவனர் வி.முரளிதரன் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து