கண்டமங்கலம் ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      புதுச்சேரி
jeyalalitha birthday punlic meetting in puthuvai

புதுவையை அடுத்துள்ள கண்டமங்கலம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

கண்டமங்கலம் ஒன்றியம், பாக்கம் கூட்ரோடு கடைவீதியில் நடந்த விழாவிற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முன்ளாள் தொகுதி அமைப்பாளர் கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தணிகாசலம், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மனோகரன், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் விஜயதாரணி, முன்ளாள் ஊராட்சி தலைவர்கள் கலியபெருமாள், ராஜ்சந்த், ஊராட்சி செயலாளர்கள் தட்சணாமூர்த்தி, நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாக்கம் ஊராட்சிமன்ற செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் மதுரைவீரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி ராமசந்திரன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மணிமாரன், பாசறை தலைவர் முரளி, வளவனூர் கோட்டாட்சி இலக்கிய அணி செயலாளர் கவுதமன், எல்ஆர்பாளையம் முன்னாள் கிளை செயலாளர் அய்யாசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஏழுமலை, ஆரிமுத்தது, முன்னாள் ஒன்றிய பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், சுமன், பொரியபாபு சமுத்திரம் கிளை செயலாளர் கோதண்டம், பேரவை செயலாளர்கள் பலராமன், ஆறுமுகம், விநாயகம், பட்டு கிளை செயலாளர் ராஜாமணி, முன்னாள் கிளை செயலாளர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆழியூர் ஊராட்சி மன்ற செயலாளர் சரவண பவானந்தம்  நன்றி கூறினார். இதில் ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து