முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்குடியில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கொடியேற்று விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      திருச்சி
Image Unavailable

லால்குடியில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கொடியேற்று விழா நேற்று லால்குடி சப்தரிஷேஸ்வரர் கோயில் அருகே நடந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷேஸ்வரர் கோயில் அருகில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. மாநில செயலாளர் அருள்வேலன் தலைமை வகித்தார்.

கோயில் வசம்

 விழாவில் சமயபுரம் மாதவ சுவாமிகள், நகர தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் சிவமணி, ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், மாவட்ட துணை தலைவர் கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மதுரை ஆதினம் பற்றி பேசுகையில் மதுரைஆதினம் சசிகலாவை முதல்வர் ஆக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவரை சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டார் இந்துக்களையும் அவர்களை பற்றிய சிந்தனையும், இந்து கோவில்களை புனரமைக்கவேண்டும் என்ற முனைப்பு அவரிடம் மதுரைஆதினத்திற்கு இல்லை என தெரிவித்தார்.

மேலும் கூட்டமைப்பின் சார்பாக அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையாக கிராமபுறங்களில் பாரம்பரியமான ஆயிரக்கணக்கான கோயில்கள் புதைந்து உள்ளன. புதைந்து கிடக்கும் இந்து திருக்கோயில்களை மீட்டு புதுப்பித்து கொடுக்க வேண்டும் எனவும், இந்து கோயில்களில் நடைபெறும் கொள்ளை, திருட்டு போன்ற நடவடிக்கைகளினால் இந்துக்கின் மனதில் காயம் உண்டாகிறது என்றும், கோயில் சொத்தை தனிமனித அபகரிப்பு செய்பவரிடம் இருந்து சட்டத்தின் துணை கொண்டு சொத்தை காப்பாற்றி கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டு அதில் வரும் வருமானங்களை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தனர். லால்குடி ஒன்றிய தலைவர் ருத்ரா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து