66 பேர் பலியான ஈரான் விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      உலகம்
iran airliner blockbox 2018 3 5

டெஹ்ரான் : கடந்த மாதம் ஈரானில் 66 பேருடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்ததாவது:

ஈரானின் ஆஸிமேன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-72 ரக விமானம் சுமார் 13,000 அடியில் பறந்துபோது ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. பிப்ரவரி 18-ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 66 பேரும் உயிரிழந்தனர்.

மீட்புக் குழுவினரின் தேடுதல் வேட்டை கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவால் தாமதமானது.

தற்போது, பனிப்பொழிவு குறைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் மீட்புக் குழுவினர் மீண்டும் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இந்த நிலையில், ஜாக்ரோஸ் பனிமலையின் ஒரு பகுதியிலிருந்து விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளை சனிக்கிழமை மீட்புக் குழுவினர் கைப்பற்றினர். அந்தப் பெட்டிகள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் பதிவாகியுள்ள விமானிகளின் உரையாடல்களை ஆய்வு செய்யும்போது விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து