வங்கி மோசடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      உலகம்
lok-sabha 2018 03 05

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி தொகுப்பு உள்ளிட்ட விவகாரங்களை எம்.பி.க்களை நேற்று எழுப்பி மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை காலையில் தொடங்கியவுடன் பிரதமர் மோடி அவைக்குள் வந்தார். சமீபத்தில் நடந்துமுடிந்த வடகிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும வகையில், பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை பிரதமர் மோடி இரு கரம் கூப்பி ஏற்றுக்கொண்டார்.

அதன் அவை தொடங்கியதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அதிமுக ஆகிய கட்சி எம்.பி.க்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர்.


தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் காவிரி நிதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு நிதித் தொகுப்பு அறிவிக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி அவையில் மையப்பகுதியில் கூச்சல் எழுப்பினர்.
இதற்கிடையே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்து இருப்பது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக, அவையில் ஒரே கூச்சலும், குழுப்பமும் நிலவியதால், அவை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவை நண்பகல் 12 மணிவரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் அவை கூடியது, அப்போது, மீண்டும் இதே சூழல் நிலவியது, காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் எம்.பி.கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனர்.

இதனிடையே பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மக்களவை உறுப்பினர் பதவியை நெய்பு ரியோ ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்தை 22-ம் தேதியே ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

நெய்பு ரியோ எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நாகாலாந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரே அடுத்த முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பும் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியிலும், கூச்சலிலும் ஈடுபட்டதால், அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அவையை நேற்று நாள்முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து