வாராக்கடன் ரூ.516 கோடி உயர்வு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      வர்த்தகம்
SBI

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.516 கோடியாக உள்ளது. 2017-18 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 38 பேர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இந்த வாராக்கடன் உருவாகியுள்ளது என்று நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 2017 புள்ளிவிவரப்படி இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் எஸ்பிஐ வங்கி 27 % வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் 1,762 கடனாளிகளின் வாராக்கடன் ரூ.25,104 கோடியாகும். இதற்கடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,120 கடனாளிகளிடமிருந்து ரூ. 12,270 கோடி வாராக்கடன் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடனில் இந்த இரண்டு வங்கிகள் மட்டும் 40 சதவீதத்தை வைத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து