ஆசியாவிலேயே மிக உயரமான திண்டுக்கல்லில் அமைந்த விநாயகர் கோவிலில் தங்கத்தேர் உலா அனைத்து சமுதாயத்தினரையும் அமைச்சர் சி.சீனிவாசன் தேர்வு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      திண்டுக்கல்
dglganesh  6 2 18

திண்டுக்கல்- திண்டுக்கல்லில் அமைந்த ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியன்று தங்கத்தேர் உலாவில் பங்கேற்க உள்ள அனைத்து சமுதாயத்தினரையும்   வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தேர்வு செய்தார்.
திண்டுக்கல் அருள்மிகு நன்மைதரும் 108 விநாயகர் திருக்கோவிலில் ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான அருள்மிகு மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 32 அடியில் ஒரே கருங்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளதால் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள விநாயகருக்கு தங்கத்தேர் உலா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சங்கடகர சதுர்த்தியன்று தங்கத்தேர் நகர் உலா வர உள்ளது. தங்கத்தேரினை ஒவ்வொரு மாதமும் பல்வேறு சமுதாயத்தினரும் பங்கு பெற வேண்டுமென வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் அனுமதி கோரினர். அவரும் பல்வேறு சமுதாயத்தினர் இவ்விழாவில் பங்கேற்பதால் சமய ஒற்றுமை ஏற்படும் எனக்கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோவில் நிர்வாகத்தினரிடம் கூறினார். இதனையடுத்து குலுக்கல் முறையில் ஒவ்வொரு சமுதாயத்தினரும் தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் திருக்கோவில் டிரஸ்டி மருதநாயகம் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி;.சீனிவாசன் தலைமை தாங்கி குலுக்கலை நடத்தி தேர்வு செய்தார்.
அதன்படி சித்திரை மாதம் திண்டுக்கல் வாணிய செட்டியார் சமுதாயம், வைகாசி மாதம் திண்டுக்கல் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயம், ஆனி மாதம் திண்டுக்கல் நாயுடு மகாஜன நல அறக்கட்டளை, ஆடி மாதம் திண்டுக்கல் மாவட்ட முக்குலத்துத் தேவர் பேரவை, ஆவணி மாதம் திண்டுக்கல்;  சவுராஷ்டிரா சமூகத்தினர். புரட்டாசி மாதம் திண்டுக்கல் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை, ஐப்பசி மாதம் திண்டுக்கல் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம், கார்த்திகை மாதம் திண்டுக்கல் பிராமணர் சங்கம், மார்கழி மாதம் திண்டுக்கல் அனைத்து நாடார் உறவின்முறை, தை மாதம் திண்டுக்கல் லெட்சுமி நாராயன சமாஜ், மாசி மாதம் திண்டுக்கல் ஆரியவைஸ்ய சபா, பங்குனி மாதம் திண்டுக்கல் ராஜூக்கள் சங்கம் என தேர்வு செய்யபட்டது.
மேலும் சித்திரை முதல் நாள் திண்டுக்கல் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயம் சிறப்பு வழிபாடு, தை மாதம் முதல் நாள் திண்டுக்கல் செங்குந்தர் இசை வேளாளர் சமூகமும், வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று திண்டுக்கல் யாதவர் சமுதாயமும் சிறப்பு வழிபாடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு சமுதாய பிரமுகர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் அறங்காவலர் மருதைநாயகம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து