கார்த்திசிதம்பரம் கைதை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      ராமநாதபுரம்
CONGRESS  6 2 18

ராமநாதபுரம்-காரத் திக் சிதம்பரம் மீது பொய்வழக்குபோட்டு அமலாக்க துறை மூலம் கைது செய்த பா.ஜ.க அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
     முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரம் மீது பொய்வழக்கு போட்டு அமலாக்க துறை மூலம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்த பா.ஜ.க அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரத்தை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் மணிகண்டன. மாவட்ட பொருளாளர் பாரிராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர், சிறப்பு அழைப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, ரமேஷ்பாபு, பொதுக்குழு செந்தாமரைக்கண்ணன், ஆதி, மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி துல்கீப், பாம்பன் ஆம்ஸ்ட்ராங். செய்தி தொடர்பாளர் கௌசிமகாலிங்கம், மகளிர் அணி மாவட்;;;ட தலைவர் சகுந்தலாதேவி, பரமக்குடி நகர் தலைவர் அப்துல் அஜீஸ், வட்டார தலைவர்கள் ஜெயபாண்டி, சேதுபாண்டி, சிறப்பு பேச்சாளர் தீப்பொறி கருணாகரன் உட்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து