மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆணையாளர் அனீஷ்சேகர் ஆய்வு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      மதுரை
mdu corparation 6 2 18

 மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.34 அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தை ஆய்வு மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டார். எஸ்.எம்.பி.காலனியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமாறும், சுகாதார வளாகத்தினை சுத்தமாக பராமரிக்குமாறும் உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியினை ஆய்வு செய்தார்.
முன்னதாக வார்டு எண்.26 பரசுராம்பட்டி எழில்நகர் பகுதியில் 13 தெருக்களில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளையும், சம்பக்குளம் பொது மயானத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறை மற்றும் மயான மேற்கூரை பணிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழ மார்க்கெட்டில் பாதாள சாக்கடை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்;, தெரு விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறும், தினந்தோறும் பழ மார்க்கெட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த பணிவிவர அறிக்கையினை தினசரி சமர்ப்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.  மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள பதிவு வைப்பறையில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை  ஆய்வு செய்தார். மேலும் எழுதுபொருட்கள் வைப்பு அறையிலும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  .வி.வி.ராஜன் செல்லப்பா, உதவி ஆணையாளர் திரு.பழனிச்சாமி, செயற்பொறியாளர்  .ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் தி அலெக்ஸ்சாண்டர், சுகாதார அலுவலர்  சிவசுப்பிரமணியன்; உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து