ராமேஸ்வரம் திருக்கோயிலில் தமிழக கவர்னர் சுவாமி தரிசனம்:அப்துல்கலாம் உறவினர்களுடன் சந்திப்பு.

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      ராமநாதபுரம்
governews 6 3 18

  ராமேசுவரம்,- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகிஹித் இன்று காலை  தனது குடும்பத்தினருடன் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தார்.அதன் பின்னர் அப்துல்கலாம் குடும்பத்தினரை சந்தித்து அப்துல்கலாம் உறவினர்களுடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்தினருடன்  ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு சுவாமி சரிசனம் செய்தவற்காக நேற்று வருகை தந்தார்.அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து ராமேசுவரம் பகுதிக்கு நேற்று அதிகாலை வந்த சேது விரைவு ரயிலில் தனி கோச்சில் வந்தார். அங்கு அதிகாலையில் வந்த கவர்னரை  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் அதிகாரிகள்  வரவேற்றனர். அங்கிருந்து காரில் ராமேசுவம் அக்னிதீர்த்தம் கடல் முன்பாக அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.அதந் பின்னர் சிறு ஓய்வுக்கு பின்  தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலையில் நடைபெற்ம் ஸ்படிகலிங்க தரிசனத்தில் தனது மனைவி மற்றும் பேத்திகளுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.திருக்கோயிலுக்கு அதிகாலையில் வந்த கவர்னரை திருக்கோயில் சார்பாக இணை ஆணையர் மங்கையர்கரசி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.அதந் பின்னர் சுவாமி சன்னதியில் நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் கலந்துகொண்டு சுவாமிஸ்ரீம தரிசனம் செய்தார்.அதன் பின்னர் புண்ணியஸ்தலமாக கருத்தப்படும் ராமேசுவரமத்தில் அமைந்துள்ள புனித தீர்த்தமான அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடினார்.பின்னர் இதனை தொடர்ந்து திருக்கோயிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தத்தில் தீர்த்தமாடினார்.அதன் பின்னர் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருகை தந்தார்.அப்போது திருக்கோயில் நுழைவு வாயிலில் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பாக ராமேசுவரம் திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையில் திருக்கோயில் குருக்கள்கள் கவர்னருக்கு பூரணகும்ப மரியாதை செயலுத்தி வரவேற்ற்னர்.அதன் பின்னர் கவர்னர் திருக்கோயிலில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதனை தொடர்ந்து திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கோயில் சார்பாக சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.அதன் பின்னர் கவர்னர் திருக்கோயில் வருகை பதிவேட்டில் திருக்கோயில் குறித்து பதிவு செய்து கையெழுத்திட்டார்.அப்பகுதியிலிருந்து புறப்பட்டு சென்ற கவர்னர் விருந்தினர் மாளிகையில் சிறிது ஓய்வுக்கு பின்பு  ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள  மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரை அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர்,மற்றும் பேரன் சேக்சலீம் ஆகியோர்கள் வரவேற்றனர்.பின்னர் கவர்னர் அங்கு அப்துல்கலாம் குடும்பத்தினருடன் 30 நிமிடத்திற்கு மேலாக அப்துல்கலாம் அண்ணனிடம் நலம் விசாரித்து   உறையாடினார்.இதனை தொடர்ந்து கவர்னர் குடும்பத்துடன் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கும் செனாறார்.அங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையும்,கடலின் அழகையும் பார்த்து ரசித்தார். தொடர்ந்து கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் பகுதியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு சில மணி நேரம் ஓய்வுக்கு பின்பு ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

திருக்கோயில் வருகை பதிவேட்டில் கவர்னர்   செய்த பதிவு:

 திருக்கோயிலில் அளிக்கப்பட்ட் வரவேற்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன்.திருக்கோயில் சுத்தமாக உள்ளது.தினசரி இதுபோல் சுத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.சொந்த விருப்பத்தில் திருக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தேன்.மன நிறைவாக உள்ளது. பூஜாரிகளுக்கு நன்றி.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து