முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் வந்தாலும் பஸ் தொழிலாளர்களின் குறைகளை தீர்த்து வைத்துள்ளது கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      ஈரோடு
Image Unavailable

கோபிசெட்டிபாளையம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கழக கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் சிறப்புரை நிகழ்த்தியபோது.

கோரிக்கைகள்

போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும் போக்குரவத்து கழக தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் போல் அதிமுக ஆட்சிக்காலத்தில் தனியாருக்கு பேருந்துகள் வழங்கப்படவில்லை. ஏதாவது போராட்டம் நடத்தி தொழிற்சங்கங்களை வளர்க்கவேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்கள் எனவும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் இன்னும் கோரிக்கைகள் இருக்கிறது என்று போராட்டம் நடத்திக்கொண்டிருந்தால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிறந்த நாள் விழா

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கழக கொடியை ஏற்றிவைத்து 70 தொழிற் சங்க குடும்ப உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் சிறப்புரை நிகழ்த்தியபோது இன்று இருக்கின்ற கஷ்டத்தில் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும் கூட அனைத்து தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளும் ஏற்று பல்வேறு பணிகள் ஆற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு இடர்பாடுகளை சந்திந்தபோதும் ஓய்வு பெற்றதற்கு பிறகு தொழிலாளர்களி நிலைகளை மனதில் கொண்டு தான் இந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

750 கோடி

இது மற்ற சங்கங்களும் நன்றாக தெரியும் திமுக தொழிற்சங்கமாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் சங்கமாக இருந்தாலும் எவ்வாறு கஷ்டங்களுக்கு இடையில் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளது என்று எண்ணிப்பார்க்கவேண்டும் அதற்காக அரசின் நிதி எவ்வளவு செலவாகிறது என்பதை தொழிற்சங்க நண்பர்கள் தங்கள் நிலையில் வைத்து தெரிந்துகொள்ளவேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டும் 750 கோடி ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. டி.ஏ.வேண்டும் என்று போராடுகிறார்கள் தற்போது பெயர்பலகையில் டி.ஏ.வேண்டாம் என்று எழுதப்பட்டிருக்கிறது ஏதாவது போராட்டம் நடத்தி தொழிற்சங்கத்தை நடத்தவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் அவர்களால் ஒரு பொழுதும் அதிமுகவை வெற்றிபெற முடியாது.

நவிந்து விடாமல்

போக்குவரத்துக்கழகம் என்பது மக்கள் சேவை நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது இலாப நோக்கில் செயல்படுத்துவது இல்லை ஏip எளிய மக்களின் நலன் கருதி கிராமபுற மக்களுக்காக பேருந்துகளை இயக்குகிறோம் இலவச பேருந்து மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கும் திட்டம் இதில் இடம் பெற்றுள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் போக்குவரத்துக்கழகம் நலிந்து விடாமல் காக்கவேண்டும் என்ற கடமை உங்களுக்கு இருகிறது. திமுக ஆட்சியில் தான் மினி பேருந்துகள் தனியாருக்கு வழங்கப்பட்டது. ஆனால் எந்த காலகட்டத்திலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் தனியாருக்கு பேருந்துகள் வழங்கப்படவில்லை ரூ.9 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் சிறப்பாக நடத்திவருகிறோம் அதனால் இதை பாராட்டவேண்டுமே தவிர இன்னும் கோரிக்கைகள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இவ்விழாவில் போக்குவரத்து கழக அதிகாரிகள் பணி மனை ஊழியர்கள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்…

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து