முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: சிறந்த திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

லாஸ் ஏஞ்சல்ஸ் : 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. சிறந்த திரைப்படத்துக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த நடிகராக டார்க்ஸ்ட் ஹார் படத்தில நடித்த கேரி ஓல்டுமேனும், சிறந்த நடிகையாக  த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி என்ற படத்தில் நடித்த பிரான்சஸ் மிக்டார்மண்டும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நேற்று நடைப்பெற்றது. 90-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றனர் மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசவுரி என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தி ஷேப் ஆப் வாட்டர் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு கவலை அளிக்கும் விஷயமாக கருதப்படும் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டும் வகையில் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர்கள் ஆரஞ்சு நிற கோர்ட் அணிந்து வந்திருந்தனர்.

சிறந்த படம்

இதில் தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது  கிறிஸ்டோபர் நோலனின்  டன்கர்க்  படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.  அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன.
ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு-

*சிறந்த படம் - த ஷேப் ஆப் வாட்டர்.

*சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹார்).

*சிறந்த நடிகை - பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி).

*சிறந்த இயக்கம் - கில்லர்மோ டெல் டோரோ (த ஷேப் ஆப் வாட்டர்).

*சிறந்த பாடல் - கோகோ (ரிமம்பர் மி).

*சிறந்த இசை - த ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்).

*சிறந்த ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்).

*சிறந்த திரைக்கதை - கெட் அவுட் (ஜோர்டன் பீல்).

*சிறந்த தழுவல் திரைக்கதை - கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி).

*சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் - த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்).

*சிறந்த ஆவண குறும்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்).

*சிறந்த படத்தொகுப்பு -  டன்கர்க் (லீ ஸ்மித்).

*சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் - பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்).

*சிறந்த துணை நடிகர் - சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி).

*சிறந்த துணை நடிகை - ஆலிசன் ஜேனி (ஐ, டோன்யா).

*சிறந்த வெளிநாட்டு படம் - எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி).

*சிறந்த அனிமேஷன் படம் - கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்).

*சிறந்த அனிமேஷன் குறும்படம் - டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்).

*தயாரிப்பு வடிவமைப்பு - தி ஷேப் ஆஃப் வாட்டர்.

*ஒலித்தொகுப்பு - டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்).

*ஒலி இணைப்பு - டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்).

*சிறந்த ஆவணப்படம் - ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்).

*ஆடை வடிவமைப்பு - பாண்டம் த்ரெட் (மார்க் ப்ரிட்ஜஸ்).

*ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - டார்க்கஸ்ட் ஹார் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்).

நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் நேற்று நடைப்பெற்றது.  முன்னதாக விருது வழங்கும் நிகழ்வின் போது இந்த ஆண்டு மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அண்மையில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல், மற்றொரு மறைந்த நடிகர் ஷசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து