ஐ.பி.எல். தொடக்க விழா ஏப். 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      விளையாட்டு
IPL Ceremony 2018 3 5

மும்பை : 6-ம் தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா 7-ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

11-வது ஐ.பி.எல்...

ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 10 ஐ.பி.எல். போட்டி நடைபெற்று உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைட்ஸ் தலா 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஜ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா 1 முறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன.

8 அணிகள்...

11-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ம்தேதி முதல் 27-ம்தேதி வரை நடக்கிறது. 9 மைதானங்களில் 51 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது. 2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதில் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், கொல்கததா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

தேதியில் மாற்றம்...

இந்தப்போட்டி தொடக்க விழா ஏப்ரல் 6-ம்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடக்க விழா ஏப்ரல் 7-ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் போட்டி நடைபெறும் தினத்தில் தான் தொடக்க விழா நடைபெறும். அதோடு வான்கடே மைதானத்துக்கு தொடக்க விழா மாற்றப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு தான் இந்த முடிவை எடுத்து அறிவித்தது.

இதேபோல தொடக்க விழாவுக்கான செலவுத்தொகையை குறைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ரூ.30 கோடியாக குறைப்பு...

ஐ.பி.எல். தொடக்க விழாவுக்கு ரூ.50 கோடி செலவிட ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது. இந்த தொகையை ரூ.30 கோடியாக குறைத்துள்ளது. அதாவது ரூ.20 கோடி தொகை குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ம்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து