டால் நினைவு செஸ்: ஆனந்த் வெற்றி

திங்கட்கிழமை, 5 மார்ச் 2018      விளையாட்டு
anand win 2018 3 5

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் டால் நினைவு துரித செஸ் போட்டி நடைபெற்று வந்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடிய இந்த போட்டியின் இறுதி சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃப்ண்டை எதிர்க்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை எளிதாக டிரா செய்தார் ஆனந்த்.

இதன் மூலம் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி என மொத்தம் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த ஆனந்த், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து