முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் பரதமாடி அசத்திய பள்ளி மாணவிகள்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் பரதமாடி அசத்திய பள்ளி மாணவிகள் ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் சலங்கை பூஜை நாட்டிய நிகழ்ச்சி : அங்க அசைவுகளுடன் பரதமாடி அசத்திய பள்ளி மாணவிகள் ஒசூர் காமாட்சி அம்மன் கோயிலில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய சலங்கை பூஜை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் வாய்பாட்டு, மிருதங்கம் மற்றும் வயலின் இசைக்கு ஏற்றவாறு முதல் பரத நாட்டியத்தை ஆடி அசத்தினர். இந்த விழாவில் ஒசூர், பெங்களுரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பரத நாட்டியத்தை கற்கும் மாணவிகள் முதன் முதலாக தங்களது குருவின் ஆசிர்வாதத்தோடு அவரது கைகளால் சலங்கைகளை கட்டி குருவிற்கு அர்பணிப்பாக சலங்கை பூஜை எனப்படும் முதல் பரத நாட்டியத்தை ஆடுவார்கள். அதன் பின்னர் சிவனுக்கு அர்ப்பணிக்கும் விதத்தில் பரத நாட்டிய அரங்கேற்றமும் அதனைத்தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்சிகள் உள்ளிட்ட பல்வேறு பரத நாட்டியங்களை ஆடி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஒசூர் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயிலில் பள்ளி மாணவிகளின் சலங்கை பூஜை விழா ந¬பெற்றது. இதில் 10 மாணவிகள் பங்கேற்று முதல் சலங்கை பூஜை பரத நாட்டியம் ஆடினர். முன்னதாக மாணவிகளின் குருவான சுபாஷினியின் கைகளால் அவரது மடியில் வைத்து ஒவ்வொருவரும் சலங்கைகளை கட்டி நாட்டியத்தில் பங்கு பெற்றனர். வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின் இசைக்கு ஏற்ப மாணவிகள் அனைவரும் தங்களது அங்க அசைவுகளை வெளிப்படுத்தி பரதம் ஆடினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சலங்கை பூஜை நாட்டிய நிகழ்ச்சியில் ஒசூர் பெங்களுர் பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டிய ரசிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து