முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருநங்கை பாரதி கண்ணம்மா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருநங்கை பாரதி கண்ணம்மா பேச்சு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் நேற்று துவங்கியது. பொருளாதாரத் துறை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக , சமூக பணி செய்து வரும் திருநங்கை டாக்டர் . பாரதி கண்ணம்மா கலந்து கொண்டு , மாணவிகளிடையே பேசினார். விழாவில் , ஜான் ஜெயகாமராஜ் இறை வணக்கம் பாட, டாக்டர் .எஸ் . ஜெயராணி வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் பேராசிரியர் பாக்டர் .சி.முத்துராஜா கலந்து கொண்டார். விழாவில் விருந்தினராக டாக்டர் .ஜே.சரோஜினி கலந்து கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல திருநங்கை பாரதி கண்ணம்மா பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் , அதை எவ்வாறு தாங்கிக் கொண்டு , வெற்றி வீரமங்கைகளாக சமுதாயத்தில் உலா வருவது என்பன பற்றியும் மாணவிகளிடையே பேசினார். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏராளமான மாணவிகள் பாரதி கண்ணம்மாவுடன் ஷெல் பி போட்டோ எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. விழாவில் மேலும் பேராசிரியைகள் டாக்டர் .கே. உஷா , டாக்டர் .எஸ் . வனிதா ஆகியோரும் கலந்து கொண்டனர். விழா நன்றியுரை டாக்டர் .எம். ஷுலா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து