பப்புவா நியூ கினியா நில நடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 67ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      உலகம்
papuva 2018 03 06

போர்கேரா: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வராத நிலையில் 67 பேர் இறந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து செஞ்சிலுவை சங்கம் கூறுகையில், ”கடந்த வாரம் போர்கோ மாகாணத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 67 பேர் பலியாகியுள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும். அதனை சீரமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது” தெரிவித்துள்ளது.

கடந்த நூறு வருடங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் என்று பப்புவா கினியா அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம்  6.0 ரிக்டர் அளவில் மீண்டும் பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து