முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத் தொலைபேசி இணைப்பில் ஊடுருவி மர்ம நபர்கள் பண மோசடி

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தின் தொலைபேசி இணைப்புகளில் ஊடுருவி, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்களது நுழைவு இசைவுக்கான (விசா) விண்ணப்பத்தில் தவறுகள் இருப்பதாகவும், அந்தத் தவறைத் திருத்தாவிட்டால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவோ, அமெரிக்காவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவோ நேரிடும் என்று ஏமாற்றுப் பேர்வழிககள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், தவறுகளை திருத்துவதற்காக விசாரிப்பதைப் போல் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்கின்றனர். அதுமட்டுமின்றி, தண்டனையிலிருந்து தப்புவதற்காக பணம் அனுப்பும்படியும் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

தங்களது பேச்சை நம்பச் செய்வதற்காக, இந்தியத் தூதரகத்தின் தொலைபேசி இணைப்புகளில் தொழில்நுட்ப ரீதியில் ஊடுவி, தூதரகத்திலிருந்தே பேசுவதைப் போன்ற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். நாங்களும் எங்களது தரப்பில் விசாரணை நடத்தி வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து