ஏர் இந்தியா விமானங்களுக்கு சவூதி சலுகை

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      வர்த்தகம்
air india(N)

புதுடெல்லியில் இருந்து  டெல் அவிவ் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பு வழியை பயன்படுத்திக்கொள்ள சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு சவூதி அரேபியா வான்பரப்பு வழியாக செல்வதற்கான ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா நேற்று கையெழுத்திட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கையால், புதுடெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் பயண தூரம் சுமார்  இரண்டரை மணி நேரங்கள் வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து