மின்னணு இயந்திரங்களை ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த பரிந்துரை: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      இந்தியா
election commission 2017 1 8

புதுடெல்லி, வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளை எண்ணாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்கெனவே மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள், தற்போது வாக்குச் சாவடி வாரியாக எண்ணப்படுகின்றன. இதன்மூலம் எந்த வாக்குச் சாவடியில் எந்த அரசியல் கட்சிக்கு மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர் என்று பகிரங்கமாகத் தெரிந்து விடும். இதன் மூலம் வெற்றி பெறும் வேட்பாளர்கள், அந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதியில் பாரபட்சமாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. இது பல பிரச்சினைகளை உருவாக்கும். எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரி யோகேஷ் குப்தா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் கூறும் போது,
தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவர கடந்த 1998-ம் ஆண்டு முதல் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வாக்குச் சாவடி வாரியாக வாக்குகளை எண்ணாமல், மின்னணு இயந்திரங்களை மொத்தமாக கலந்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அப்போதே பரிந்துரை செய்துள்ளது என்று தெரிவித்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் கூறும்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒன்றாக கலந்து வாக்குகள் எண்ணும் முறையை கொண்டு வருவதற்கு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, புதிய நடைமுறையை கொண்டு வரும் போது, வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருந்து தகவல்கள் கசியாது என்ற நம்பகத்தன்மை மற்றும் இயந்திரங்களில் முறைகேடு நடத்த முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து