முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்றம் துவங்கும் முன்பாக, வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி சிலை முன்பு திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் தொடங்கியதும், போராட்டத்தில் ஈடுபட்ட பதாகைகளுடன் உள்ளே நுழைந்த உறுப்பினர்கள், அங்கும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் பாராளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதாகைகளைப் பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.12,600 கோடி மோசடிக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சிவ சேனா கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் உறுப்பினர்களும் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆனால், அவர்களது கோரிக்கைகள், மேற்சொன்ன உறுப்பினர்களின் கோஷங்களால் கேட்காமல் போனது. தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அமளியில் ஈடுபட்டதால், 2வது நாளும் பாராளுமன்றம் முடக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து