தெலுங்கானா முதல்வருக்காக ரூ.7 கோடி செலவில் தயாராகும் புல்லட் புரூப் பேருந்து

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      இந்தியா
Bulletproof bus 2018 03 06

ஐதராபாத், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் பாதுகாப்புக்காக ரூ.7 கோடி செலவில் புல்லட் புரூப் பேருந்து வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி 10 கொரில்லாப் படையினர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சந்திரசேகர ராவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத பேருந்து கட்டமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இப்பணியை சாலை மற்றும் கட்டட அமைப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாநில முதல்வரின் சுற்றுப் பயணங்களின் போது பயன்படுத்தப்படும் இந்த பேருந்தை கட்டமைக்க ரூ.7 கோடி செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ் ஏற்கனவே புல்லட் புரூப் பேருந்தைத்தான் பயன்படுத்தி வருகிறார். இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிக்கப்பட உள்ள பேருந்து மேலும் பல புதிய வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் என்றும், பழைய பேருந்து அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து