முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனங்குடி ஊராட்சியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      சிவகங்கை
Image Unavailable

   சிவகங்கை-           சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், பனங்குடி ஊராட்சியில் (04.03.2018) அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் கீழ் குடிநீர் பணிக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு மையத்தினை   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து தெரிவிக்கையில்,
          மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் போதிய அளவு குடிநீர் வழங்குவதற்காக ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரத்தை பாதுகாக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றையதினம் பனங்குடி ஊராட்சியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரை சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நாள்தோறும் 3,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினந்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ரூ.6.20 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை தூய்மையான குடிநீரை பயன்படுத்தி சுகாதாரக் கேடுகள் இன்றி உடல் ஆரோக்கியத்தை பாதுக்காத்திட மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் முழு முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
          மேலும் இப்பகுதியில் புதிய கால்நடைக்கிளை மருந்தகம் அமைக்க பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசு ஆரம்பச்சுகாதார வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகளும் செய்து தரப்படும். இப்பகுதியில் புதிய சமுதாயக்கூடம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகள் இரண்டு இடங்களில் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
         இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பர்ணபாஸ், சேவியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து