அதிமுக அரசை எதிர்த்து அனைத்து கட்சிகளும் அறிக்கை விடுவதில் மட்டுமே செயல்படுகிறது அமைச்சா் திண்டுக்கல் சீ.சீனிவாசன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      திண்டுக்கல்
minister srinivasan 6 3 18

 வத்தலக்குண்டு, - திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், ஆத்துர் முன்னாள் யூனியன் சேர்மன் கோபி, வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகரச்செயலாளா் பீா்முகமது, சித்தரேவு கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் மற்றும் தையல்மிசின்கள், பொங்கல்பானைகள், வேஷ்டிசேலைகள் மறறும் அரிசிபைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளான திமுக, மதிமுக, இடது வலது கம்னியூஸ்ட்கள் என அனைத்து கட்சிகளும் ஆக்கபூா்வமான மக்கள் நலனை விடுத்து அதிமுகவை குறை சொல்லி அறிக்கைவிடுவதில் தங்கள் காலத்தை கடத்துகின்றனா். பாமக கட்சி தினந்தோறும் ஒரு அறிக்கை எதற்காக என தெரிவில்லை. விஜயகாந்த் அம்மாவின் உதவியுடன் தமிழகத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை பிடித்தார்கள் ஆனால் அம்மாவை எதிர்த்தவுடன் முகவரி இல்லாமல் சென்று விட்டனா். நாம் யாரைபற்றியும் கவலைபட தேவையில்லை அவா்களை அம்மாவின் ஆத்மா பார்த்துக்கொள்ளும். ஆா்கே நகரில் வெற்றி பெற்றதை எம்ஜிஆரை போல் வெற்றி பெற்றதாக கூறுவது தவறு அது மோசடியான ஹவாலா வெற்றி இது நீடிக்காது உண்மையில் ஆா்கே நகரில் 48சதவீதம் வாக்குகள் அதிமுக பெற்றள்ளது மக்களிடம் முன்னேற்றத்தை காட்டுகின்றது. தமிழகத்தில் காவேரி தண்ணீர் பாய்ந்தால் தான் தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் விவசாயம் செழிக்கும். 6 வாரங்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தற்போது 2 வாரங்கள் ஓடிவிட்டன. இதுசம்பந்தமாக மத்திய அரசிடம் பேசிய போது மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் இதுபற்றி பேசுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுசம்பந்தமாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலிடம் நேரிடையாக பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார். நேற்று இதுசம்பந்தமாக பேச்சு வார்த்தை தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. விரைவில் தமிழகத்தின் நலன் கருதி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். தமிழக மக்களின் நலன் கருதியே ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இணைந்து செயல்படுகின்றன. முஸ்லீம் சமுதாய மக்கள் எதிர்த்த முத்தலாக் சட்டத்தை தமிழக அரசும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டது. மத்திய அரசுக்கு ஆளும் அ-.தி.மு-.க அரசு ஜால்ரா தட்டவில்லை. தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய திட்டங்கள் முறையாக கிடைத்து அதன்மூலமாக பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்தியஅரசுடன் இணைந்து செயல்படுவதாக கூட்டத்தில் பேசினார். வத்தலக்குண்டு நகரவங்கி தலைவா் மரியபிரகாசம், துணைத்தலைவா் வெங்கடேஷ், கணவாய்பட்டி லதாஜெயராமன், சித்தரேவு ஊராட்சி கழக செயலாளா் ராஜீ, ஒன்றிய சிறுபாண்மை தலைவா் முகமது, கூட்டுறவு சங்க செயலாளா் விஜயன், சித்தையன்கோட்டை பேருர் கழக செயலாளா் அக்பா்அலி, தொகுதி செயலாளா் பழனிச்சாமி, மீனவரணி இணைச்செயலாளா் அந்தே்ானிசாமி, அய்யம்பாளையம் முன்னாள் தலைவா் பாஸ்கரன், ஆலமரத்துபட்டி கண்ணன், மற்றும் கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர சார்பு அணியினா் என பலா் கலந்து கொண்டனா்

 


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து