முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பிக்கள் போராட்டம் - அ.தி.மு.க. - தி.மு.க. இணைந்து நடத்தின

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட தமிழக கட்சிகளை சேர்ந்த எம்.பி.கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதி தீர்ப்பு...

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி நீரை 177.25 டி.எம்.சி நீராகக் குறைத்து திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டி.எம்.சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டி.எம்.சி நீர் ஒதுக்கியது.

நீதிபதிகள் உத்தரவு

பெங்களூரு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டி.எம்.சி நீரை ஒதுக்கீடு செய்தது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இணைந்து போராட்டம்

இந்த நிலையில் காவிரி மேலாண்மையை வாரியம் உடனே அமைக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் காந்தி சிலையின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிடோர் பங்கேற்று காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று குரல் எழும்பினர்.

ஆட்சேபம் இல்லை ...

போராட்டம் குறித்து தம்பிதுரை எம்.பி. கூறும் போது, காவிரி பிரச்சினையில் நீதி கிடைக்கும் வரை வரை பாராளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். காவிரி பிரச்சினை என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. தி.மு.க எங்களுடன் இணைந்து போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து