சச்சினின் சாதனைகளை கோலி முறியடிப்பார்: ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத் கணிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      விளையாட்டு
Glenn McGrath 2018 3 6

மெல்போர்ன் : தொடர்ந்து அதிரடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் அவர் கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தடுக்க முயற்சிப்பேன்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் கூறியதாவது:-

விராட்கோலி திறமையான பேட்ஸ்மேன். தன்னம்பிக்கை உள்ள வீரர். ஒரு பவுலராக நான் அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவேன். அவர் அதிக ரன் குவிக்கும் திசைகளை கண்டறிந்து அதை தடுக்க முயற்சிப்பேன். அவருக்கு சரியான திசையில் தான் பந்துவீச வேண்டும். ஷாட்பிட்ச் மற்றும் புல்டாசாக வீசினால் அடித்து நொறுக்கிவிடுவார். அவர் இயல்பாக ரன் குவிப்பதை தடுக்க அவரது எண்ணத்துடன் நான் விளையாடவே விரும்புவேன்.

அதிரடி தாக்குதல் ...

டெண்டுல்கரையும், விராட்கோலியையும் ஒப்பிட விரும்பவில்லை. ஏன்னென்றால் ஒவ்வொரு வீரரும் விளையாடும் காலம் வேறுபாடு கொண்டவை. சச்சின் காலத்தில் அவர் தீர்மானித்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார். விராட்கோலி அதிரடி தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறார். அவர் தொடர்ந்து இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தெண்டுல்கர் சாதனையை முறியடிப்பார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து