நத்தம் மாரியம்மன் கோவில் மாசிபெருந்திருவிழா ஆயிரக் கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      திண்டுக்கல்
natham kovil 6 3 18

நத்தம், - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவ¤ல் தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசிபெருந்திருவிழா தனி பெருமைவாய்ந்தது. இந்த விழாவானது கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோய¤லுக்கு வந்து காப்புகட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். தொடர்ந்து மாரியம்மன் மயில்,சிம்மம்,அன்னம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி மின்விளக்கு அலங்காரத்தில் நகர்வலம் வந்தது. .தொடர்ந்து பக்தர்கள் மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை எடுத்து வந்து சாத்தினர். பின்னர் அரண்மனை பொங்கல் வைக்கப்பட்டது.
           இந்த திருவிழாவையட்டி கரும்புதொட்டில், அங்கபிரதட்சனம், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், முடி எடுத்தல், பூக்குழிக்கு தேவையான விறகு கட்டைகள், உப்பு மிளகு செலுத்துதல், உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை காணிக்கையாக கோவிலுக்கு வந்து பக்தர்கள் செலுத்தினர். 
              திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நேற்று  நடைபெற்றது.  இதையட்டி காலையில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து, நீண்ட அலகு குத்தியும் வந்தனர்.  கோவில் முன்பாக கழுமரம் ஊண்றப்பட்டு அதன் பின்னர் கழுமரம் ஏறப்பட்டது. தொடர்ந்து மாலையில் சிறியவர் முதல் முதியவர் வரையிலும், கைக்குழந்தைகளுடன் பெண்களும் பக்தி பரவசத்துடன் பூக்குழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கினர். இந்நிகழ்ச்சி இரவு வரை நீடித்தது.  பின்னர் கம்பம் கோவிலிலிருந்து அம்மன்குளம் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று காலையில் அம்மன் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் நகர்வலம் வந்து கோவிலில் இருப்பிடம் சேரும்.
              முன்னதாக இந்த பூக்குழி திருவிழாவின் போது நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், நத்தம் அதிமுக முன்னாள் தொகுதி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். குடிநீர் பொது சுகாதார ஏற்பாடுகளை பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட  பணியாளர்கள் செய்திருந்தனர். பூக்குழி இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்வதற்கு வசதியாக மரத்தடுப்புகளை தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்க மாநில துணைதலைவர் நயினப்பன் அமைத்திருந்தார். பாதுகாப்பு பணியில் நத்தம் போலீசார் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட போலீசார்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து