முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு: உலக பணக்காரர்கள் வரிசையில் அமேசான் நிறுவனர் முதலிடம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிகை
அமெரிக்காவில் இருந்து வெளியாவது போர்ப்ஸ் பத்திரிகை. ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்களின் பட்டியலை இந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலுக்கு பிஸினஸ் உலகில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலக பணக்காரர்களின் பெயர் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்துள்ளது அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ். இவரது சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ் 2-வது இடம்
இவரை தொடர்ந்து, மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலர் ஆகும். கடந்த ஆண்டு 544-வது இடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு 200 இடங்கள் பின்தங்கி 766-வது இடத்தை பெற்றுள்ளார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து