கிம் ஜாங்-நாமை கொலை விவகாரம்: வட கொரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றசாட்டு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      உலகம்
Kim Jongnam 2018 03 07

வாஷிங்டன்: வடகொரியா கிம் ஜாங்-நாமை கொலை செய்ய ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

குடும்ப ஆட்சி....
வடகொரியாவில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டை நிறுவிய தேசத்தந்தை கிம் இல் சங். அவரது மறைவுக்கு பின்னர் அவரது மகன், கிம் ஜாங் இல் ஆட்சிக்கு வந்தார். அவர் 2011-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கிம் ஜாங் நாம் (வயது 46), கிம் ஜாங் சுல் (36), கிம் ஜாங் அன் (33) என 3 மகன்கள், கிம் யோ ஜாங் (30) என ஒரு மகளும் உண்டு.

கடைசி மகனான...
தந்தையின் மரணத்துக்கு பின்னர் மூத்த மகனான கிம் ஜாங் நாம் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கடைசி மகனான கிம் ஜாங் அன் ஆட்சிக்கு வந்தார். அவர் இன்றைக்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ஆனால் அவருக்கு போட்டியாக திகழ்ந்து வந்தவர் அவரது அண்ணன் கிம் ஜாங் நாம். இருவரும் அண்ணன், தம்பி என்றாலும், ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்கள்.

விஷம் கொடுத்து...
இந்த நிலையில், கிம் ஜாங் நாம், கடந்த வருடம் பிப்ரவரி  13-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கே வந்த 2 பெண்கள் கொடிய விஷ திரவத்தில் நனைத்து எடுத்த ஊசிகளைக் கொண்டு அவரை குத்தி வீழ்த்திவிட்டு, ஒரு வாடகைக்காரில் ஏறி  பறந்து விட்டனர். மயங்கி சரிந்த அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை விஷம் கொடுத்து கொன்ற பெண்கள் உளவாளிகள் என கூறப்படுகிறது.

திங்களன்று கிம் ஜோங் நாமின் படுகொலை பற்றிய அமெரிக்கா கண்டுபிடித்து புதிய தடைகளை நடைமுறைப்படுத்தியது என பெடரல் ரிஜிஸ்டர் நவுரெட் கூறினார். அமெரிக்காவின் சட்டத்தின் கீழ், ஒரு நாடு அல்லது தலைவர் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மீதான தடைகளை மீறுகின்றபோது அதன் இறக்குமதிகளில்  தடை விதிக்கப்படுகிறது.

வடகொரியாவுக்கு...
அமெரிக்கா படுகொலை செய்ய இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை கடுமையாக கண்டிக்கிறது. இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான உலகளாவிய விதிகளுக்கு எதிரான இந்த பகிரங்கக் காட்சி மேலும் வட கொரியாவின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது, எனன நவுரெட் கூறினார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து