ஹெல்மெட் அணிவது கழுத்து எலும்புகளையும் பாதுகாக்கும் ஆய்வில் தகவல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      உலகம்
helmet(N) 0

வாஷிங்டன்: ஹெல்மெட் அணிவது தலையை மட்டுமல்லாமல் கழுத்து எலும்புகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

1061 பேரிடம் ஆய்வு...
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் ‘ஹெல்மெட்’ (தலைக்கவசம்) அணிவது மிகவும் அவசியம். அதே நேரத்தில் விபத்தின் போது கழுத்து எலும்பு முறிவதற்கு ஹெல்மெட்டும் ஒரு காரணம் என்ற கருத்தும் உள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2010 முதல் 2015-ம் ஆண்டுவரை இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட 1061 பேரின் மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்தனர்.

15.4 சதவீதம் பேருக்கு....
அவர்களில் 323 பேர் விபத்தின்போது ஹெல்மெட் அணிந்து இருந்தனர். 738 பேர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்த 7.4 சதவீதம் பேருக்கு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாதவர்களில் 15.4 சதவீதம் பேருக்கு அதாவது அதிக சதவீதம் பேருக்கு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.


மேலும் பாதுகாப்பானது...
இதன்மூலம் ஹெல்மெட் அணிவது விபத்து காலங்களில் தலைக்கு மட்டுமின்றி கழுத்து எலும்புகளுக்கும் பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து