கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் தமிழகத்திற்கு முதலிடம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      வர்த்தகம்
Kerala kuttanad

கேரளாவுக்கு வரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குநர்(சந்தைப்படுத்துதல்) வி.எஸ்.அனில் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளாவுக்கு வரும் உள்ளாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கேரளா வரும் பயணிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் இருந்து மட்டும் கடந்த ஆண்டில் 12.75 லட்சம் பேர் கேரளா வந்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 1.46 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதேபோல, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொருத்தவரை 10.91 லட்சம் பேர் கேரளாவுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாவின் மூலம் கடந்த ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து