முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

கடந்த 1-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 144 ஆக இருந்தது. பின்னர் விலை உயர்ந்து 5-ந் தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 376-க்கு விற்றது. அதை தொடர்ந்து விலையில் சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 272 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 424ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.19 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,928-க்கு விற்பனையானது.

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து