முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் பணியாளர்களை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி கஜேந்திர சாண்டெல், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக்க இலக்கு வைத்துள்ளோம். பெண் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதை படிப்படியாக அதிகரிக்க உள்ளோம் என்றார். ஜனவரி மாதம் வரையில் 2,628 பெண் பணியாளர்கள் உள்ளனர். இது ஆலையின் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையில் ஐந்து சதவீதமாகும். ஆலையில் மொத்தம் 41,390 நபர்கள் பணிபுரிகின்றனர்.

நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 55,159 ஆகும். கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரிகளில் இருந்து அதிக பெண்களை பணிக்கு அமர்த்துகிறோம். 2016-ம் ஆண்டில் 13 சதவீதம், 2017-ம் ஆண்டில் 19 சதவீதமும் அதிகரித்துள்ளோம். 2018-ம் ஆண்டில் புதிதாக எடுக்கும் பணியாளர்களில் 25 சதவீதம் பெண்கள் இருப்பார்கள். ஆண்களுக்கு நிகராக பெண் பணியாளர்களுக்கான வாய்ப்புகளை நிறுவனம் அளித்து வருகிறது. பாலின வேறுபாடுகளை சீராக குறைத்து வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து