உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகள்: இன்ஃபோசிஸ் தகவல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      வர்த்தகம்
Infosys(N)

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் முக்கியமான உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகளை வழங்கி உள்ளது. புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கிற்கு 1.13 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதில் 84,768 பங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதமுள்ள 28,226 பங்குகளை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த தகவலை பிஎஸ்இ-க்கு இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கிறது. 2015-ம் ஆண்டு பங்குகள் வழங்கும் திட்டத்தின் படி முக்கிய உயரதிகாரிகள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு இந்த பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து