மிந்திராவில் பிளிப்கார்ட் ரூ.414 கோடி முதலீடு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      வர்த்தகம்
flipkart

இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், பேஷன் நிறுவனமான மிந்திராவில் ரூ.414 கோடியை முதலீடு செய்திருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த எப்கே மிந்திரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து மிந்திராவுக்கு இந்த முதலீடு வந்திருக்கிறது. எப்கே மிந்திரா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தான் பிளிப்கார்ட்டின் தாய் நிறுவமானகும். மிந்திரா நிறுவனம் உரிமை பங்குகள் வெளியீடு மூலம் இந்த நிதியை திரட்டி இருக்கிறது.
ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள், உரிமை பங்குகள் மூலம் மேலும் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த அடிப்படையில் இந்த முதலீடு நடந் திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு மிந்திரா நிறுவனத்தை பிளிப்கார்ட் வாங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து