பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினிகாந்த்!

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
Rajini 2017-12 31

சென்னை: சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.
தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடர்பான பணிகளிலும், மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சியை அறிவிப்பதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ள ரஜினிகாந்த், சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார்.

வந்துட்டேன்னு சொல்லு
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் புளூடிக் வெரிபைடு குறியீட்டுடன் ரஜினிகாந்த் பக்கம் உள்ளது. பேஸ்புக் பக்கத்தில் தனது முதல் பதிவாக “ வணக்கம்” என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதேபோல், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்துடன், வணக்கம்! வந்துட்டேன்னு சொல்லு! என்றும் பதிவிட்டுள்ளார்.  நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் டுவிட்டரில் கணக்கு துவங்கி அவ்வப்போது சில தகவல்களை பதிவு செய்து வருகிறார்.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளார். ஆனால், இன்ஸ்டகிராமில் கமல்ஹாசன் இன்னும் இணையவில்லை.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து