முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு ஆதார் எண் கேட்க கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நீட் தேர்வு எழுதுபவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி கேட்கக்கூடாது என சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் இணைப்பது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே விசாரித்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதுபவர்கள் அடையாள சான்றாக ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என சி.பி.எஸ்.இ சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. இதை எதிர்த்து குஜராத்தை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

நீட் தேர்வு எழுதுவதற்கு அடையாள சான்றாக ஆதார் எண் கேட்கக்கூடாது. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு அட்டை போன்ற பல ஆதார சான்றுகள் உள்ளதால், தேர்வு எழுதபவர்கள் தங்கள் விருப்பம்போல் ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக தரலாம். இந்த விவகாரத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்களிடம் ஆதார் எண் கேட்டு வற்புறுத்தக் கூடாது எனக் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து