ராஜேஷ் லக்கானி உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை, தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சாய்குமார் முதலமைச்சரின் முதன்மை செயலாளர்-1 ஆகவும், எல்காட் மேலாண்மை இயக்குனர் சுடலைக்கண்ணன் ஐ.ஏ.எஸ் திட்ட இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  முன்னாள் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சி.எம்.டி.ஏ உறுப்பினர் இயக்குனராகவும், சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளராகவும், நந்த குமார் ஐ.ஏ.எஸ் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஷாம்பு கல்லோலிகர் வீட்டு வசதி வாரிய இயக்குனராகவும், விஜயராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாரிய இயக்குனராகவும், விவேகானந்தன் தொழில்நுட்ப கல்வி இயக்குனராகவும், சோமநாதன் வணிகவரித்துறை இயக்குனராகவும் அதுல்யா மிஸ்ரா வருவாய் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து