ஆதார் இணைப்புக்கான காலக்கெடு 31-ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
aadhaar 2017 4 16

புது டெல்லி, அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் பயன்பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீட்டிக்க வாய்ப்பு

மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வு முன்பு, ஆஜரான மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ஆதார் தொடர்பான வழக்கு நீண்டகாலம் நடந்து வருகிறது. பல்வேறு நலத் திட்டங்களின் பயன்பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை கடந்த காலத்தில் ஏற்கெனவே சிலமுறை நீட்டித்துள்ளோம். எனவே, இப்போதுள்ள காலக்கெடுவான மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

எதிராக உள்ளது...

ஆதார் திட்டத்துக்கு எதிராக வாதாடிய வழக்குரைஞர் அரவிந்த் தத்தார், ஆதார் அட்டை திட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளது மிகவும் முக்கியமான விஷயம். அதே நேரத்தில் மனுதாரர்கள் ஏற்கெனவே கூறிய கருத்துகளையே மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து