முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும் ஊரகவளர்ச்சிதுறை அலுவலர் சங்கம் கோரிக்கை

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தர்மபுரி
Image Unavailable

ஊரக வளர்ச்சிதுறையில் திட்டபணிகளை நிறைவேற்றிட உரிய கால அவகாசம் வழங்கவேண்டும், ஊழியர்களை நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

கோரிக்கை

ஊரகவளர்ச்சித் துறையில் பாரத பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம், தனிநபர் கழிப்பிடம், வட்டாரங்களை ஆய்வு செய்யும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய பணிகளில் களத்தில் உள்ள சிரமங்களை கணக்கில் கொள்ளாமல் கடுமையான நெருக்கடி தந்து உடனடியாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கும் போக்கை கைவிட வேண்டும். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தனி அலுவலர் என்ற கூடுதல் சுமையை தந்துள்ளனர்.

ஊராட்சிக்கு உரிய நிதி வழங்காத நிலையிலும் மக்கள் பணியாற்றி, கடுமையான வறட்சியிலிருந்தும் டெங்குவிலிருந்தும், மக்களை மீட்டெடுத்த ஊராட்சி செயலாளர்ககள், உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் களை கொடுமை படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கட்டிடங்கள் எழும்பாமல் தொகை விடுவிக்க நிர்ப்பந்தபடுத்துவதை கைவிடவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து