திரிபுரா, தமிழகத்தில் சிலை சேத சம்பவங்கள்: பிரதமர் மோடி கடும் அதிருப்தி - நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
Modi 2017 12 20

புதுடெல்லி : திரிபுரா மற்றும் தமிழகத்தில் நடந்த சிலை சேத சம்பவங்களால் பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தொண்டர்களிடையே...

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டு கால  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டிய பா.ஜ.க, முதல் முறையாக அங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. முதல் முறையாக பா.ஜனதா திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால் அங்கு அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் மார்க்சிஸ்ட்– பா.ஜனதா தொண்டர்களிடையே மோதலும் நடந்தது.

சர்ச்சை பதிவு...

இந்த நிலையில் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பெலோனியா நகரில் நிறுவப்பட்டிருந்த சோவியத் ரஷியாவின் மறைந்த தலைவர்  லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், “லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று பதிவிட்டு இருந்தார்.

எச்.ராஜா விளக்கம்

எச்.ராஜாவின் கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சர்ச்சைக்குரிய பதிவை தான் பதிவிடவில்லை எனவும் பேஸ்புக் அட்மின் தனது அனுமதியின்றி பதிவு செய்து விட்டார் என்றும் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எச்.ராஜா விளக்கம் அளித்து இருந்தார்.

பிரதமர் அதிருப்தி...

இந்த நிலையில், சிலைகள் சேதப்படுத்துவது தொடர்பான சம்பவங்களால் பிரதமர் மோடி கடும்  அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் மோடி பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தலைவர்கள் சிலைகளை உடைப்பவர்கள் மீது மாநில அரசுகள் உரிய  நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுத்தியுள்ளது.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து