மனைவி புகார் எதிரொலி: பி.சி.சி.ஐ ஒப்பந்த பட்டியலில் ஷமி பெயர் நீக்கம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      விளையாட்டு
shami 2018 03 07

புது டெல்லி, பி.சி.சி.ஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் இடம்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக வெளியாகி இருக்கும் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அதேபோல் வீரர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
 
ஷமியின் மனைவி நேற்று தான் தன் கணவர் மீது புகார் அளித்து இருந்தார். ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றம் சாட்டியிருந்தார்.  மேலும் அவர் செய்த ஆபாசமான சாட்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறினார். அதேபோல் இந்த விஷயம் அனைத்தும் பி.சி.சி.ஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனாலும் பி.சி.சி.ஐ இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

இதனால் பி.சி.சி.ஐ அமைப்பு மீதும் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் பி.சி.சி.ஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. இவ்வளவு நாள் சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் மாறி மாறி ஷமி இடம்பெற்று இருந்தார். ஷமியின் பெயர் அனைத்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக முன்னாள் வீரர்கள் பெயர்தான் பட்டியலில் இருந்து எடுக்கப்படும். ஆனால் முதல்முறையாக ஷமி பெயர் அணியில் இருக்கும் போதே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணத்தை பி.சி.சி.ஐ அமைப்பு இன்னும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து