முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்ற ஆணையாளர் அனீஷ் சேகர் உத்தரவு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை- -மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 மேலமாரட் வீதி, நேதாஜி ரோடு ஆகிய பகுதிகளில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப் பட்டிருந்த பொருட்கள் மற்றும் இருசக்கர வாகங்களை அகற்ற ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  உத்தரவிட்டார்.
 மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 மேலமாரட் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினையும், நேதாஜி ரோடு கடலைக்கார சந்து, மேலமாசி வீதி ஆகிய பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார். அப்போது மேலமாரட் வீதியில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களையும், நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டு இனி வருங்காலங்களில் நடைபாதையில் இதுபோன்று நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
 அதனைத் தொடர்ந்து அழகப்பன் நகர் கண்ணன் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு வரி விதிப்பது தொடர்பாக கட்டிடத்தின் அளவை சரிப்பார்த்து ஆய்வு செய்தார். மேலும் தூய்மையான புனிதமான இடத்திற்கான திட்டத்தின் கீழ் பழங்காநத்தம் ரவுண்டாவை அழகுப்படுத்தி புதுப்பிப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் பாத்திமா கல்லூரி சந்திப்பு ரவுண்டானா, கே.கே.நகர் ரவுண்டானா, விமானநிலைய சாலை அவனியாபுரம் ரவுண்டானா ஆகிய 4 ரவுண்டானாக்களை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தி புதுப்பிப்பதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர்  கௌச லாம்பிகை, செயற்பொறியாளர்  சேகர், உதவி செயற்பொறியாளர் திரு.ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்தரவேல், சுகாதார அலுவலர்  ராஜ்கண்ணன், உதவி வருவாய்அலுவலர்  முகம்மதுரபீக், உதவிப்பொறியாளர்  முத்துராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள்  .சுப்புராஜ்,  வீரன்,  பால்பாண்டி,  நாகராஜ்  உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து