திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியுடன் சென்னை வோல்டெக் நிறுவனம் ஒப்பந்தம்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      திண்டுக்கல்
dglpsna  7 3 18

திண்டுக்கல், - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கும் சென்னை வோல்டெக் நிறுவனத்துக்கும்இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் சேவை நிறுவனமான வோல்டெக் பிரைவேட் லிட் 1995ம் ஆண்டு முதல் தன் சேவைகளை தந்து வருகிறது. பொறியியலில் குறிப்பாக எல்க்ட்ரிக்கல் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு தரம் வாய்ந்த தொழில்முறை பயிற்சியை வழங்குகிற நோக்கில் இந்த நிறுவனமானது திண்டுக்கல் _ பழனி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான கையெழுத்திடுகிற நிகழ்வு பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இந்நிகழ்வில் வோல்டெக் குழுமத்தின் தலைவர் உமாபதி, கல்லூரியின் துணைத்தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை முனைவர் ராஜசேகர் வரவேற்று பேசினார். உமாபதி ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி நிர்வாகமும், மாணவர்களும் அடையவிருக்கிற நற்பயன்களை விவரித்தார். கல்லூரி துணைத்தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவு மாணவர்களின் வளர்ச்சிக்கு இந்நிகழ்வு ஒரு மைல்கல்லாக அமையுமென பெருமைபடத் தெரிவித்தார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் நிறைவுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையினர் செய்திருந்தனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து