முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் சசிகலாவுக்கு சலுகை விவகாரம்: முன்னாள் டி.ஜி.பிக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை - கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு, முன்னாள் டிஜிபிக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக முன்னாள் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படையால்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கூறி சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றச்சாட்டு கூறினார். மேலும் சிறையில் போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உயர்மட்ட குழு...

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க சில பரிந்துரைகளும் அரசுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் சத்திய நாராயணராவும், ரூபாவும் தங்களின் பணி நடத்தை விதிகளை மீறி செயல்பட்டனரா? என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

சித்தராமையா மறுப்பு

இந்த நிலையில் முதலமைச்சர் சித்தராமையா கூறியதால், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் என கர்நாடக ஐகோர்ட்டில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா மனு செய்து உள்ளார். மேலும் சசிகலாவுக்கு கட்டில், தலையணை போன்ற சலுகைகள் வழங்கியதாக மனுவில் சத்தியநாராயணா தகவல் தெரிவித்து உள்ளார். இது குறித்து  கர்நாடகா முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்து உள்ளார்.  சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குமாறு, முன்னாள் டிஜிபி சத்தியநாராயணாவுக்கு நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சத்தியநாராயணா பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து