சிறைக் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்மதம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      உலகம்
pakistan 2017 6 8

இஸ்லாமாபாத் : சிறைக் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்ற இந்தியாவின் யோசனைக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளின் எல்லையில் இருந்துவரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை செய்த பிறகு, கைதிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்ற இந்தியாவின் யோசனைக்கு வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒப்புதல் அளித்தார்.

மூன்று யோசனைகளை இந்திய அரசு முன்வைத்தது. முதலாவதாக பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோரை ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது யோசனையில், நீதிக் குழுவுக்கு புத்துயிர் அளிக்கலாம் என்றும் மூன்றாவது யோசனையில், இருநாட்டுச் சிறைகளிலிலும் தண்டனை பெற்று வருபவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்வதற்காக மருத்துவக் குழுவை அனுப்பி பரிசோதிப்பது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த யோசனைகளுடன், 60 வயதைக் கடந்த கைதிகளையும், 18 வயதுக்கும் குறைவான கைதிகளையும் பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று கவாஜா ஆசிப் யோசனை முன்வைத்துள்ளார்.  எங்கள் தரப்பு யோசனைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்று முகமது பைசல் தெரிவித்தார். இந்த யோசனைகளை இந்தியா எப்போது பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியது என்ற தகவல் இல்லை.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து