திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      தமிழகம்
CM Edapadi 2017 9 2

சென்னை, திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 7.3.2018 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  துவாக்குடி சுங்கச்சாவடி அருகே  தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், நிற்காமல் சென்ற ராஜாவின் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும்  துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா  குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  எனது உத்தரவின் பேரில், திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்பட்டுள்ளார். துறை ரீதியாக பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக  குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து