ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம்: கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல் ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      தமிழகம்
highcourt chennai 2017 09 06

சென்னை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா மரணமடைந்த விவகாரம் கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருவெறும்பூரில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 மாத கர்ப்பிணியான உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போக்குவரத்துக் காவலரின் மோசமான நடவடிக்கையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை நடத்தினர். போக்குவரத்து காவலர் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் நேற்றுக் காலை உயர் நீதிமன்றம் கூடியதும் திருவெறும்பூரில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த சம்பவம் பற்றி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அப்போது கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது; சட்டவிரோதமான செயல். சுருக்கமாக இது கிரிமினல் குற்றத்துக்கு நிகரான ஒரு செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து