ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: உ.பி.யில் இருந்து அருண்ஜெட்லி போட்டி

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      இந்தியா
arunJAITLEY 2017 10 24

புது டெல்லி : ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார்.

ராஜ்யசபாவில் 16 மாநிலங்களின் 59 எம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி போட்டியிட உள்ளார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார். மேலும் மத்திய அமைச்சரக்ள் ரூபாலா, மாண்டவியா ஆகியோர் குஜராத்தில் இருந்தும் பா.ஜ.க பொதுச்செயலர் பூபேந்திர யாதவ் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் போட்டியிட உள்ளனர். சமூக நீதித்துறை அமைச்சர் கெலாட் மத்திய பிரதேசம், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பீகாரில் இருந்தும் ஜே.பி நட்டா இமாச்சலில் இருந்தும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் இருந்து ஒரு ராஜ்யசபா எம்.பி.யை பா.ஜ.க தேர்ந்தெடுக்க முடியும். ராஜீவ் சந்திரசேகர், விஜய் சங்கேஸ்வர் ஆகியோர் பெயர்களை கர்நாடகா பா.ஜ.க, மேலிடத்துக்கு பரிந்துரைத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸை பொறுத்தவரை கன்னடர்களுக்குத்தான் வாய்ப்பு தர வேண்டும் என முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து